தேர்தலுக்காக சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்து மூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள தேர்தலின் போது தொழில் புரியும் ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக தமக்குரிய உரிமை மீறப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுமுறை தொடர்பாக தேர்தல் செயலகம் வெளியிட்ட சுற்றுநிரூப அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதோடு வாக்கெடுப்பின் போது வாக்களிக்க உரிமையுள்ள தமது ஊழியர்களுக்கு சட்டத்தின் கீழ் உரிமையுள்ள விடுமுறையை தனியார் மற்றும் அரசாங்க தொழிற்றுறையிலுள்ள ஊழியருக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும் இரத்த பரிசோதனை !
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரைய...
வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு...
|
|