தேசிய வீடமைப்பு அதிகார சபையால் – வலி.மேற்கில் 80 வீடுகள் அமைக்கப்படவுள்ளன!

Sunday, June 3rd, 2018

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் ஜே-160 அராலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 80 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. வலி.மேற்குப் பிரதேச செயலாளர் பொன்னம்பலம் பிறேமினி இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

வலி.மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 80 பயனாளிகளில் 23 பயனாளிகளுக்கு வேள்ட் விசன் நிறுவனம் மலசலகூட வசதியை வழங்க முன்வந்துள்ளது.

இவ்வாறான வீடு மற்றும் மலசலகூடங்கள் அமைக்கும் பயனாளிகளுக்கான கட்டட அனுமதியை முன்னுரிமை அடிப்படையில் காலம் தாழ்த்தாது வழங்கி உதவுமாறு பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.

Related posts: