தேசிய விளையாட்டுப் போட்டிக்கான குழு நியமனம்!

இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டுப் போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் தலைமையின் கீழ் நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேசிய விளையாட்டுப் போட்டியானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களை மையப்படுத்தி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடைப்பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கரப்பந்து , கரம், செஸ், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் யாழ் நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சியில் நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் நடாத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|