தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் நிறைவு!

Friday, October 6th, 2017

இலங்கையின் 2021 ஆம் ஆண்டு வரையான தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அமுலாக்கம் மற்றும் முன்னேற்றும் குறித்து ஆராய்ந்து அறிக்கைப் படுத்துவதற்கான குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன் முன்னேற்றங்கள் குறித்து இந்த மாதம் அமைச்சரவை உள்ளக கூட்டம் ஒன்றும் நடைபெறும். இதன்போது குறித்த குழு தமது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நேற்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவிக்கப்பட்டது

Related posts: