தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு 7 மாதங்களில் 17 கோடி ரூபா நஷ்டம் !

Tuesday, November 17th, 2020

நாட்டில் கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மேலும் தொடருமானால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையாக காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 17 கோடி ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரை கொரோனா தொற்று நிலைமை நீடித்தால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 2 கோடியே 40 இலட்சம் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பளம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்காக குறித்த தொகையை திறைசேரியில் இருந்து கோர வேண்டியநிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: