தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வு; மாகாண பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை

Sunday, March 20th, 2016

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் சுமார் 36 ஆயிரம் ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் எம்.பந்துசேன, அரச சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலய கல்வி அலுவலகங்களின் தகவல்களை பெற்று, மாகாண கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளை பெற்று ஆசிரியர்களின் பதவியை உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது செயற்பாட்டு ரீதியான பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக, கல்வியமைச்சின் செயலாளர், அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலைமையின் கீழ், தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை துரிதப்படுத்த, மாகாண சபை பாடசாலை ஆசிரியர்கள் சம்பந்தமாக பின்பற்றப்படும் பதவி உயர்வு நடைமுறையை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பிலும் கையாண்டால், சிறந்தது என செயலாளர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: