தேசிய கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்!

Wednesday, October 12th, 2016

தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்படும் கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் தகுதியானோரிடமிருந்து கோரப்படுகின்றன.

இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமது விண்ணப்பங்களை “பணிப்பாளர்” , ‘ஆசிரியர் கல்வித் துறை’, தேசிய கல்வி நிறுவகம், மகரகம எனும் முகவரிக்குப் பதிவுத் தபால் மூலம் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பப் படிவங்களைத் தேசிய கல்வி நிறுவகத்தின் இணையத்தள முகவரியான nie.lkஇலிருந்து அல்லது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென மேற்படி கற்கை நெறியின் இணைப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி மூலமும் நடாத்தப்படும் இக் கற்கை நெறியின் தமிழ் மொழி மூலப் பாடநெறி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி நிலையத்தில் நடைபெறும்.

images

 

Related posts: