தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பங்களிப்பு வழங்குவோம் – ஜே.வி.பி.!
Tuesday, December 13th, 2016தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்திய வட்டமேசை பேச்சுக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையான ஈடுப்பாடுடன் பங்களிப்பு வழங்கும் என முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹோரத் தெரிவித்தார்.
இறுதி அரசியலமைப்பு வரைபை முன்வைப்பதற்கு முன்பதாகவே ஒற்iயாட்சி மற்றும் சமஷ்டி என சுய நல அரசியலுக்காக கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து நாட்டின் எதிர்காலம் கருதி செயற்பட வேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும்.
எனவே தான் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக பல யோசனைகளை போர் முடிந்தவுடனேயே முன் வைத்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக தெளிவுப்படுத்துகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹோரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
|
|