தேசிய அடையாள அட்டைக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்!

Wednesday, September 26th, 2018

எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக அவற்றைச் சமர்ப்பிக்குமாறு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள மூன்று இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களில் சுமார் மூன்று இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts: