தேசப்பற்றாளர்களாகினர் தேசத்துரோகிகள்!
Friday, December 9th, 2016பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் தேசத் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட ஊவா-வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட இலங்கை வீரர்கள் 19 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரப் போராட்ட வீரர்களாக பிரகடனம் செய்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தால் சுதந்திரப் போராட்ட வீரர்களை தேசத் துரோகிகளாக பிரகடனம் செய்யப்டிருந்தனர். இதனை இரத்துச் செய்யும் வகையில் கொழும்பில் தாம் பிரத்தியேக ஆவணத்தின் மூலம் கைச்சாத்திட்டு ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளர் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன் பிரகாரம், கெப்பெட்டிபொல திசாவ, கொடகெதர ரட்டே அதிகாரம், கட்டகால, மொஹட்டாலே, மஹாபெத்கம ரட்டராலே, குடாபெத்மே ரட்டராலே, பலன்கொல்லே மொஹட்டாலே, வத்தேகாலே மொஹட்டாலே, பொல்கஹகெதர ரெஹனராலே, பொசேரவத்தே விதானே, கியுளேகெதர மொஹட்டாலே, கலுகமுவெ மொஹட்டாலே, உடுமாதுர மொஹட்டாலே, கொ{ஹகும்புரே வளவ்வ ரட்டராலே, பூட்டாவே ரட்டேரால, பக்கினி கஹவெல ரட்டராலே, மஹபதுளே ரட்டேராலே, புளுபிட்டியே மொஹட்டாலே, பல்லேமல்ஹெயே, கமதிராலே ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.
1818ம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியை தலைமைதாங்கி வழிநடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரிட்டன் ஆளுநர் ரொபட் ரௌன்றிக் இவர்களை தேசத் துரோகிகளாக பிரகடனம் செய்தார். இதற்குரிய ஆவணம் 1818ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி வெளியிடப்பட்டது.
Related posts:
|
|