தேங்காய் விலை திடீர் உயர்வு !

யாழ்ப்பாணத்தின் சந்தைகளில் தேங்காய்களின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய் கொள்வனவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 55 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காயொன்று 70 ரூபா முதல் 80 ரூபா வரையும், 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நடுத்தரத் தேங்காய் 50 ரூபாவாகவும், 30 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிறிய தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
யாழ். மாவட்டத்திலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்று மதியாகின்றமையும் , கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட மழையுடனான காலநிலையுமே தேங்காய்களின் விலை உயர்விற்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் இலங்கை !
வவுனியாவில் பழையபேருந்து நிலையம் வரை உள்ளூர் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – நிறைவேற்றப்பட்டது தீர்ம...
தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!
|
|