தேங்காயை அதிக விலைக்கு விற்றால் தண்டனை!

இலங்கை ஒரு தேங்காயை அதிகபட்சமாக 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த தென்னை செய்கை சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும் என்று தென்னை செய்கை சபை கூறியுள்ளது. தேங்காய் ஒன்றை நுகர்வோர் கொள்வனவு செய்யும் வரையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் செலவாகின்ற முழுத் தொகையை கணக்கிடும் போது, ஒரு தேங்காயை அதிகபட்சமாக 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று அந்த சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்
குறித்த விலையை மீறி அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுங்கள் - சபையில் சுனில் சவால்!
எரிபொருள் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் – IOC
அரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு!
|
|