தெல்லிப்பழை, சாவகச்சேரியில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

Wednesday, April 11th, 2018

யாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(10) இரவு நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழைப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீடுபுகுந்து சரமாரியாக வாளால் வெட்டியதில் 19 வயதான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் துரத்தி துரத்தி நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் 21 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: