தெல்லிப்பழைப் பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை!

வடமாகாணத் தொழிற் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச் சந்தை-2018 நேற்று புதன்கிழமை(11) முற்பகல்-10.30 மணியளவில் யாழ். மல்லாகம் காங்கேசன்துறை வீதியிலுள்ள சகாயமாதா தேவாலய வளாகத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச. சிவஸ்ரீ கலந்து கொண்டு சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச்சந்தையைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த விற்பனைச் சந்தையில் தென்னை பனைசார் உற்பத்திப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், அலங்கார உற்பத்திப் பொருட்கள், ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த விற்பனைச் சந்தையை பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதுடன், உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்தும் செல்கின்றனர்.
Related posts:
பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் - விவசாயத்துறை ...
ஸ்கொட்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி - ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் ஆரம்பம...
தேசிய பாடசாலைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்கள் - 2 வாரங்களில் நிரப்ப ஏற்பாடு - மாகாண பாடசாலைகளின் ...
|
|