தெல்லிப்பளையில் இரண்டாம் கட்ட வீடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு!

நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்ட இவ் வீடுகளை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மற்றும் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகம் ஆகியோர் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
குறித்த வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக நூறு வீடுகள் ஏற்கனவே ஐனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீடுகள் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் ஒன்பது இலட்சம் ருபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
|
|