தெற்காசியாவில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை!

தெற்காசிய நாடுகள் வரிசையில் குறைந்தளவில் எச்.ஐ.வி பரவும் நாடாகஇலங்கையுள்ளதாகவும் 0.1 சதவீத அளவிலேயே இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகாணப்படுவதாகவும் தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி நோய் தொற்றுதல் குறித்து அறியாமை மற்றும் முன்கூட்டியே அறிந்துகொள்வதில் ஏற்படும் தாமத நிலை நோய் முதிர்ச்சியடைவதற்கான அடிப்படைகாரணிகள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபாலதெரிவித்தார்.
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிள்ள ஒருகலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை முதிர்ச்சியடையும் வரை வெளிப்படுவதில்லை.பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுவதால் இதன் தாக்கமும்அதிகமாகவே இருக்குமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
குடும்ப சுகாதார பணியகத்தில் இன்று இடம்பெற்ற எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியல் சந்திப்பு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
|
|