தென்னைச் செய்கையாளர்களுக்கு மானியக் கொடுப்பனவு வழங்கல்!

Tuesday, January 17th, 2017

தென்னைச் செய்கையாளர்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கரைச்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வானது 2016ஆம் ஆண்டுக்கான கீழ்வரும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியக் கொடுப்பனவாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக கடந்த வருடம் பயனடைந்த பயனாளிகளுக்கு தென்னைச் செய்கைச் சபையால் தென்னைச் செய்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தென்னை மண், ஈரப்பதன் பேணல், தென்னை மரங்களுக்கான டொலமைற் பிரயோகம், ஊடு பயிர்ச்செய்கை மற்றும் தென்னை மட்டைக்குழி அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயற்படுத்தியவர்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது

தென்னை3-1050x600

Related posts: