துப்பாக்கிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியவை அல்ல – குற்றப் புலனாய்வு திணைக்களம்!

ரத்துபஸ்வெல பகுதியில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அனுப்பட்ட 40 துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல என இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகளை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் லலித கங்கங்கர உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
தொடரும் மழையுடன் கூடிய காலநிலை!
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!
அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் - சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்ப...
|
|