துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இரதோற்சவத்தை முன்னிட்டுப் பாதயாத்திரை 

Tuesday, October 3rd, 2017
இலங்கை வாழ் மக்களிடையே அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வரலாற்றுச் வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இரதோற்சவத்தை ஒட்டிய புனித திருத்தலப் பாத யாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை(03)  முற்பகல் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.
இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபை யாழ். சின்மயா மிஷனுடன் இணைந்து இந்தப் புனித திருத்தலப் பாத யாத்திரையை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் தலைவர் வை. மோகனதாஸ் தலைமையில் இந்தப் பாதயாத்திரை இடம்பெறுகிறது. இந்தப் பாதயாத்திரையின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பல திருத்தலங்களைத் தரிசித்த பின்னர்  பாதயாத்திரை பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தைச் சென்றடையும். பின்னர் அங்கிருந்து புறப்படும் பாதயாத்திரை நாளை காலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தைச் சென்றடையும்.

Related posts: