தீ பாதிப்பை அடுத்து மாணவிகள் விடுதிக் கட்டடத்தின் தரத்தை உறுதிப்படுத்த பணிப்பு!

Monday, January 30th, 2017

யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் ஏற்பட்ட தீயினால் கட்டடத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை ஆராயக் கட்டடத்தை நிர்மாணித்த நிறுவனததிற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் கட்டடத்தின் தரத்தை உறுதி செய்த பின்னரே அதில் மாணவிகள் தங்க அனுமதிக்கப்படுவர். என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்நர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவி விடுதிகளில் பெண்களுக்கான புதிய விடுதியில் கடந்த வியாழக்கிழமை பெரும் தீ ஏற்பட்டது. யாழ்.மாநகர சபையின் தீ அணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து மாணவிகள் பாதுகாப்பாக அவசர அவசரமாக ஏணி மூலமாக மாடியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையிலேயே விடுதிக் கட்ட்த்தின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டடத்தை நிர்மாணித்த நிறுவனத்திடம் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுள்ளது.

ccc

Related posts: