தீவகப் பகுதியில் மணல் கால்நடை கடத்தல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

Tuesday, March 27th, 2018

தீவுப் பகுதியில் இடம் பெற்று வரும் தொடர் மணல் கடத்தல் கால்நடை கடத்தல்களை கட்டுப்படுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் தீவகப் பகுதியில் கடந்த பல மாதங்களாக சட்ட விரோத மணல் அகழ்வு கால்நடைகளை வெளியிடங்களுக்கு கடத்தும் நடவடிக்கைகள் பரிய அளவில் இடம் பெற்று வந்தன.

இந்நிலையில் இதற்கெதிராக தீவக சிவில் சமூகம் குரல் கொடுத்து வந்ததுடன் கட்டுப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த 12 ஆம் திகதி கால்நடை கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லைப்பிட்டிப் பகுதியில் மாடு கடத்தலுடன் தொடர்புடைய மேலுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்

இதே வேளை புங்குடுதீவுப் பகுதியில் மாடு கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டநிலையில் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

தீவகத்தின் இடம் பெற்று வந்த தொடர் கால்நடை கடத்தல் மற்றும் மணல் கடத்தல்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது குறித்த நடவடிக்கையில் ஊர்காவற்றுறை பிரதம பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசேகர தலமையில் மண்டைதீவு பொறுப்பதிகாரி விவேகானந்தன் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரி சில்வா ஆகியோர் தலமையில் அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவினர் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது பொலிசாரின் தீவிர நடவடிக்கையைத் தொடர்ந்து தீவகத்தில் சட்ட விரோத நடவடிக்கைகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளமை குறித்து தீவக சிவல் சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

Related posts:

போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவர் - இலங்க...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் நவீன முறைமை - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவ...
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்படும்!