தீவகத்திலிருந்து படகு மூலம் யாழ். நகருக்கு மாடு கடத்தல் – வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் கைது!

Saturday, April 7th, 2018

தீவகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வீதி ஊடாக மாடு கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் படகுமூலம் மாடுகளை கடத்தும் புதிய யுத்தியை கடத்தல்காரர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

புங்குடுதீவிலிருந்து 5 மாடுகளை பிளாஸ்ரிக் படகில் கடத்தி வந்த 3 பேர் காக்கைதீவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 5 மாடுகளும் உயிருடன் மீட்க  பட்டுள்ளது. படகும், அதனைச் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம், நகரில் மாட்டைக் கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டது என்று கூறப்படும் “பட்டா” ரக வாகனம் என்பனவும் சிறப்பு புலனாய்வுப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: