தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் யாழ்.மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் திட்டவட்டம்!
Wednesday, November 9th, 2016
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை எவரும் செவிமடுப்பதாக இல்லை. எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். இவ்வாறு வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.றொபின்சன் தெரிவித்துள்ளார்.
“யாழ் மாநகர சபையின் தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்களாக நீண்டகாலம் கடமையாற்றும் 127 தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுவரை அது குறித்து எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. தொழிலாளர்களுக்கு யாழ்.மாநகர சபையால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மாகாண சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்குள் நியமனங்கள் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. நியமனம் வழங்கப்படாது தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகள் உடுத்து இவர்களுக்கான நியமனங்களை வழங்கும்வரை பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும். யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை எவரும் செவிமடுப்பதாக இல்லை. எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.” என்று சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|