தீர்ப்பையிட்டு சந்தோசப்படுகிறேன் – சந்தியா எக்னெலிகொட!

Saturday, June 16th, 2018

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்குத் தீர்ப்பை முன்னிட்டு தான் சந்தோசமடைவதாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு எதிரான தண்டனையை அறிவித்த நேற்று முன்தின நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்டு விட்டு வெளியேறும் போதே அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இந்த தேரரால் பாதிப்புக்குள்ளான பலர் உள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும் தான் நான் இந்த வழக்கில் முன்னிலை வகித்தேன்.

இந்த வழக்கு தொடர்பில் இறுதிவரை நான் சமாதானம் செய்துகொள்ளசச் செல்லவில்லை. நீதிமன்றத்தின் கௌரவத்தை நீதிபதி சிறப்பான முறையில் பேணியுள்ளார் எனவும் சந்தியா எக்னெலிகொட மேலும் தெரிவித்தார்.

Related posts: