தீயில் எரிந்தது வகுப்பறை!

Monday, October 9th, 2017

வவுனியா, மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலய மாணவர் வகுப்பறை கொட்டகை நேற்று இரவு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் தரம் 10 மாணவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெற்று வந்த வகுப்பறையே தீயினால் எரிந்துள்ளது.

கிடுகினால் வேயப்பட்டிருந்த குறித்த கொட்டகை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அவ் வகுப்பறையில் இருந்த தளபாடங்களும் தீயில் எரிந்துள்ளன.குறித்த பாடசாலையில் இன்றைய தினம் ஆசிரியர் தின நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில் இரவு 12.30 மணிவரை மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலையில் அலங்கார வேலைகளைச் செய்து விட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் காலை ஆறு மணியளவில் பாடசாலைக்கு பெற்றோர்கள் வருகை தந்த போதே பாடசாலை கொட்டகை தீயில் எரிந்து காணப்பட்டுள்ளது.இதனையடுத்து ஈச்சங்குளம் பொலிஸாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: