திருமலை எண்ணெய் கிடங்கு விவகாரம்: இந்தியா செல்கிறார் அமைச்சர் மலிக்

Tuesday, April 25th, 2017

திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து நிர்வகிப்பது குறித்து உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக இம்மாத இறுதியில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்தியா செல்லவுள்ளதற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு வெளியிடுவதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இயக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஜே.வி.பி. ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.நாட்டின் சொத்துக்களை பாதுகாக்காமல், அதனை விற்பனை செய்யவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related posts: