திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – பொலிஸார் திவிர விசாரணை!

Sunday, October 25th, 2020

கிளிநொச்சி – தர்மபுரம் , கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் திருமண விழாவிற்கு வருகை தந்த இளைஞரொருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் திருமண நிகழ்வு ஒன்றிற்காக தர்மபுரம்,கட்டகாடு பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞன் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த இளைஞனை தேடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞன் திருமண நிகழ்வு இடம்பெற்ற வீட்டின் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: