திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்ய புதிய நடைமுறை!

Monday, October 3rd, 2016

 

இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது.

இலங்­கையில் சிறுவர் பரம்­­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்­குடன் அறிமுகப்படுத்தப்­பட்­டுள்ளபிள்­ளை­­ளினை பாது­காப்போம்தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் நடை­மு­றைப்­­டுத்தும் பொருட்டு பெற்­றோர் திரு­மணம் புரி­யாத சந்­தர்ப்­பத்தில் பிள்­ளையின் பிறப்பினை பதிவு செய்யும் போது தந்­தையின் பெயர்தெரி­யாதுஎன்­­தற்குப் பதி­லாக தாய் மற்றும் தகப்பன் இரு­­ரி­னதும் விருப்­பத்தின் பேரில் தகப்­பனின் பெய­ரினை பிறப்­புச்­சான்­றி­தழில் உட்புகுத்து­­தற்கு சந்­தர்ப்பம் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­­தாக பதி­வாளர் நாய­கத்­தி­ணைக்­­ளத்தின் 07/2016 ஆம் இலக்க சுற்று நிருபம் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

மேலும் பிறப்பு, இறப்புச் சட்­டத்தின் 21 ஆவது பிரி­வினால் சட்­­ரீ­தி­யாக திரு­­­மா­காத ஜோடிகளுக்குப் பிறக்கும் பிள்­ளை­யி­னது பிறப்­பினை தகப்­பனின் தக­வல்­­ளினை உட்­பு­குத்தி பதிவு செய்­­தற்­காக ஏற்­பா­டுகள் உள்­ளன. பிள்­ளையின் பிறப்­பினை பதிவு செய்­­தற்­காக பெற்­றோரின் விவாகச் சான்­றி­­ழினை கட்­டா­­மான சான்­றாகக் காட்­டு­­தனால் இவ்­வா­றான பிள்­ளை­களின் பிறப்­பினை பதிவு செய்­­தனை தவிர்ப்­­தற்கு அல்­லது தந்­தையின் தக­வல்கள் இன்றி பதிவு செய்வதற்கு இட­முள்­ளது.

ஆகை­யினால் திரு­­­மா­காத தாய்க்குப் பிறக்கும் பிள்­ளை­களின் பிறப்­பினை பதிவு செய்­­தற்கு வேண்­டுகோள் சமர்ப்­பிக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் தாயுடன் தகப்­­னையும் அழைப்­­தற்கு அனைத்துவித முயற்­சி­­ளையும் மேற்­கொள்ளல் வேண்டும்.

பெற்றோர் இரு­வரும் இதற்­காக தோற்­று­வதன் கார­­மாக பிள்­ளையின் பிறப்புச் சான்­றி­­ழுக்கு தகப்­பனின் தக­வல்­­ளினை உட்­பு­குத்திப் பதிவு செய்­­தற்கு இயலும் என கட்­டா­­மாக பெற்றோருக்கு அறி­வு­றுத்த வேண்டும். அதற்­கி­ணங்க பிறப்புச் சான்­றி­தழில் 10 ஆவது நிரலில் தாய் மற்றும் தந்­தையின் ஒப்­பத்­தினைப் பெறு­­தோடு பிறப்­புச்­சான்­றி­தழின் 4 ஆவது நிரலில் தகப்­பனின் தக­வல்­களை உட்­பு­குத்தி, 6 ஆவது நிரலில் இல்லை என குறிப்­பிட்டு, 7 ஆவது நிரலில் தாய்­வழி பாட்டனின் தக­வல்­­ளினை குறிப்­பிட்டு, 8 ஆவது நிரலில்தாய் இலங்­கையில் பிறந்­தவர்என அல்லது பொருத்­­மான விதத்தில் தாய் வழிப்­பூட்­டனின் தக­வல்­களைக்

குறிப்­பிட்டு 9 ஆவது நிரலில் பெற்றோர் இரு­­ரி­னதும் பெய­ரினைக் குறிப்­பிட்டு திரு­­­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்­­­தற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக மாவட்ட பதிவாளர்கட்கும், அனைத்து பிறப்பு, இறப்பு மற்றும் வைத்திய பதிவாளர்கட்கும் பதிவாளர் நாயகம், .எம்.குணசேகர 07/2016 ஆம் இலக்க சுற்று நிருபத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

mother

Related posts: