திருட்டு மணல் விற்பதைத் தடுக்க விசேட ஏற்பாடு – கிளிநொச்சியில் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Thursday, January 19th, 2017

கிளிநொச்சியில் இடம்பெறும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தேவைகளுக்கு நிலவும் மணல் தேவையைப் பூர்த்தி செய்யவும் திருட்டு மணல் விற்பனையைத் தடுப்பதற்கும் விசேட ஏந்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட அரச அதிபர் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மணல் கொள்ளை தொடர்பிலும் மாவட்டத்தின் மணல் தேவையைப் பூர்த்தி செய்யுமாறம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் திணைக்கள அதிகாரிகளுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு மறித்தனர். அங்கு அவர்களால் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துக்களான மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத்திட்டம், பொது வேலைத்திட்டங்கள் எவற்றுக்கும் நியாயபூர்வமாக மணலைப் பெறமுடியவில்லை. இருப்பினும் இதே மாவட்டத்தில் கள்ள மணல் அகழ்வு இடம்பெறுவதோடு அவர்களிடம் அதிக விலை கொள்;வனவு செய்யும் அவலமே தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, இந்த 2 பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்கும் வகையிலேயே ஆராயப்பட்டது. இதன் அடிப்படையில் ஓரு விசேட முடிவு எட்டப்பட்டது. அதாவது மக்களின் தேவைக்கு ஏற்ற வகையில் நியாய விலையில் மணலை வழங்குவதன் மூலம் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுவதால் அவர்கள் திருட்டு மணலைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படாது,. அதேபோன்று அவர்களுக்கு வழங்கும் மணலை நியாய விலையில் வழங்கும் நோக்கில் இரு புதிய அனுமதி முறைகள் நடைமுறைக்கு வரும். அவ்வாறு வழங்கப்படும் மணலை இரு ப.நோ.கூ சங்கங்களிடமே வழங்குவதற்குத் தீர்மானித்தோம். இவ்வாறு யாட் அனுமதி வழங்கப்படுகின்றபோது மணலுக்கான ஒரு நியாய விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விநியோகம் இடம்பெறுகின்ற பட்சத்தில் மணலால் ஏற்படும் அதிக பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையும் என்றார்

????????????????????????????????????
????????????????????????????????????

Related posts: