திரிபோஷ பாவனையை அதிகரிக்க நடவடிக்கை.!

Sunday, August 21st, 2016

இவ்வருட இறுதிக்குள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ பாவனையை 100 விகிதமாக அதிகரிப்பதற்கு இலங்கை திரிபோஷ சங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எம். டி பந்துசேன தெரிவித்தார்.

750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் திரிபோஷ பாவனை அதிகரிக்க இலங்கை திரிபோஷ சங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்…

கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு 250 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 17 இலட்சம் திரிபோஷ பக்கட்டுக்கள் நாடளாவிய ரீதியில் மாகாண சுகாதார அமைச்சகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தன. இதன் பிரகாரம் மேலதிகமாக ரூபா 750 மில்லயன் நிதியொதுக்கீட்டில் 35 இலட்சம்  திரிபோஷ பக்கட்டுக்கள் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: