திண்மக் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்க கோரிக்கை

Thursday, January 26th, 2017

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்.மாநகர சபை வட்டார ரீதியாக ஒலிபொருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றது.

மாநகராட்சி ஊடாக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் கடந்த நவம்பர் மாதம் ஆம்பிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையும் திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது. திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து கழிவகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் பிளாஸ்ரிக், கண்ணாடி, இலத்திரனியல் பொருட்களை வேறாக்கி ஒப்படைக்க வேண்டும். திண்மக் கழிவகற்றும் பிரிவினருக்கு அனைவலும் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

jaffna

Related posts: