திடீர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Sunday, September 17th, 2017

யாழ். அரியாலைப் பகுதியில் வீடொன்றில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தரொருவர் எதிர்பாராத வகையில் திடீர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி இன்று சனிக்கிழமை(16) பிற்பகல் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மின்சார இணைப்பு வேலையைத் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள  குறித்த குடும்பஸ்தர் அரியாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்றைய தினம் மின்சார இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

அரியாலை மாம்பழம் சந்திப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.