திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி!

மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.
எனினும் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்து காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
இன்று (15) காலை 7.30 மணி அளவில் மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதியில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த போது கீழ் பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளதோடு முச்சக்கர வண்டி தீப்பற்ற ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து தீக்கிரையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இனிப்புக்கும் இனி வர்ணக் குறியீடு!
மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கவும் நிதி ஒதுக்கியது!
குளிரான காலநிலை வடக்கில் இரு வாரங்கள் நீடிக்கும்!
|
|