திங்கட்கிழமை முதல் புதிய வேலை நேர மாற்றத்திற்கான சுற்றுநிரூபம்!

governant-680x365_c Wednesday, September 13th, 2017

பத்தரமுல்லை அரச அலுவலங்களுக்கான புதிய வேலை நேர மாற்றத்திற்கான சுற்றுநிரூபம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரத்தில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முதல் மூன்று மாத காலத்திற்கு நிறுவன தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் இந்த நெகிழ்வான அலுவலக நேர முறைமை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பொதுமக்களின் சேவைகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறு புதிய அலுவலக நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்த நிறுவன தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் று.னு.சோமதாஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ஆட்பதிவுத் திணைக்களமும், குடிவரவு திணைக்களமும் ஒரேநாள் சேவைகளை வழங்கும் வகையில் அலுவலக நேர மாற்றத்தை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.


கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்களுக்கான பதிவுகளை மேற்கொண்டிருப்பவர்க...
முல்லைத்தீவில் சிறுபோகம்!
மேலும் 800 ஏக்கர் காணிகளை வலி.வடக்கிலிருந்த விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்!
தகுதியற்ற தராதரங்களுடன் பணியாற்றிய 20 ஆசிரியர்கள் பணி நீக்கம்!
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சகல மக்களின் பங்களிப்பும் அவசியம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறு...