தாய்சேய் மரணவீதம் இலங்கையில் குறைவடைந்துள்ளது!

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தாய்சேய் இறப்பினைக் குறைக்க இலங்கையின் விஷேட சிறுவர் வைத்தியர்கள் சிறந்த முறையில், அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலிமுகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை சிறுவர் விஷேட வைத்தியர் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தின் ஆரம்பவிழாவில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய இளைய தலைமுறையினரின் சுகாதாரத்தை பாதுகாக்க வைத்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உரிமை கோரப்படாத பொருட்களை உறுதிப்படுத்திப் பெறக்கோரிக்கை!
உயிருடன் மீட்கப்பட்ட சிசு!
எரிபொருள் தொடருந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!
|
|