தாயின் அழுகைக்க மதிப்பளித்து போட்டியை நிறுத்திய நடால்!
Friday, September 30th, 2016
கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது தாய் ஒருவர் அழுவதை கண்டு நட்சத்திர வீரர் ராபேல் நடால் போட்டியை இடையில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மன்னாகோர் பகுதியில் உள்ள ராபேல் நடால் விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ராபேல் நடால், டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்த கார்லஸ் மோயா(40) மற்றும் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் மெக்னோர்(57) ஆகியோர் பங்குபெற்றனர்.
இக்கண்காட்சி டென்னிஸ் போட்டியில் ராபேல் நடாலும், ஸ்பானிஸ் அணியைச் சேர்ந்த சைமன் சோல்பாஸ்ம் ஆடிக்கொண்டிருந்தனர்.
போட்டியின் போது பந்தை ராபேல் அடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு பார்வையாளர்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியவில்லை. அதன் பின் தாய் ஒருவர் தன் குழந்தையை காணவில்லை என கூறி சத்தமிட்டுள்ளார். குழந்தை கிடைக்காததால் அவர் தொடர்ந்து அழுதுள்ளார். இதனால் போட்டியை நடால் இடையில் நிறுத்தினார்.
தாயின் அழுகுரலை கேட்ட அக்குழந்தை தாயை பார்த்து அழுது கொண்டே சத்தமிட்டது. அதன் பின்னர் தாய், குழந்தையை கட்டிப் பிடித்து அழுத சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்து.
இதைக் கண்ட ராபேல் நடால் தாயிக்கு குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் இடையில் நின்ற போட்டியை ஆரம்பித்தார். ரபேல் நடாலின் இந்த செயல் வீடியோ எடுக்கப்பட்டதால், தற்போது அந்நாட்டில் உள்ள சமூகவலைத்தளங்களில் ராபேல் நடலாலின் புகழ் வைரலாக பரவி வருகிறது.
Related posts:
|
|