தாமதத்தால் எதிர்காலத்தை இழக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்!

Sunday, August 21st, 2016

ஜேர்மனி Frankfurt விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் கட்டுநாயக்கா விமானநிலையத்தை  வந்தடைந்தது.

விமானப்பணியாள் ஒருவரின் வருகை தாமதம் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானியின் பதவியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாமதம் காரணமாக, Frankfurt விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டிருக்க வேண்டிய விமானம், நேற்று காலை கட்டுநாயக்கவை அடைந் துள்ளதுடன் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனால் ஐரோப்பிய விதிமுறைகளுக்கு அமைய பயணிகளுக்கான நஸ்டஈடு வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாமதத்தை காரணமாக கொண்டு குறித்த பிராங்போட் – கொழும்பு விமானசேவை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: