தாதியர், மருத்துவர்களுக்கான விடுதிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!

Wednesday, June 20th, 2018

வடக்கு மாகாணத்தில் தாதியர்கள், மருத்துவர்கள் தங்கிநின்று சேவைகள் வழங்கக்கூடிய வகையில் விடுதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பணிபுரியும் தாதியர், மருத்துவர்கள் உட்பட மருத்துவ துறை சார்ந்தவர்கள் தங்கி நின்று  சேவையை சிறப்பாக வழங்குவதற்கு அவர்களுக்கான விடுதிகள் போதாமல் உள்ளன.

தற்போது காணப்படும் விடுதிகள் சிலவற்றிற்கு நடப்பு வருடத்தில் கிடைத்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுங்கேணி, தெல்லிப்பழை, நயினாதீவு, வேலணை பிரதேச மருத்துவமனைகள், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை, அக்கராயன் பிரதேச மருத்துவமனை, செட்டிக்குளம் பிரதேச மருத்துவமனை, மன்னார் மாவட்ட மருத்துவமனை, முருங்கன் பிரதேச மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர், தாதியர்களுக்கான விடுதிகள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: