தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

Thursday, September 6th, 2018

வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் இன்று(06) சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் உப தலைவர் சிவயோகன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தேர்விக்கையில்; “.. 2016ஆம் ஆண்டு மருத்துவ சேவை நிலை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேரக் கடமைக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான நிதி நடப்பாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனினும், கடந்த ஆண்டுக்கான நிதி எமக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. எனினும் கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று வரை குறித்த இந்தப் பணம் வழங்கப்படவில்லை. இதனை வழங்க வலியுறுத்தியே இன்று போராட்டத்தில் குதிக்கவுள்ளோம்..” என்றார்.

Related posts: