தாஜூடினின் கடன் அட்டை குறித்து விசாரணை ஆரம்பம்!

Friday, March 3rd, 2017

முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் இந்த மாதம் 16 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலைச் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக, அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வசீம் தாஜூடினின் கடன் அட்டை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

tajudeen-211

Related posts: