தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸாருக்க எதிராக  மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Thursday, January 19th, 2017

யாழ்.சுண்டுக்குழிப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் ஆதாரத்துடன் பொலிஸாரிடம் முறையிடப்பட்ட போதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவர்கள் மறுப்பதாக மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறையிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சுண்டுக்குழிப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் கடந்த 15ஆம் திகதி அதிகாலை வேளை 6பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் பாதுகாப்பு வேலியை உடைத்து உட்புகுந்தது. அவர்கள் வீட்டில் பல உடைமைகளையும் சேதப்படுத்திச் சென்றனர். இவ்வாறு சேதப்படுத்திய குழுவிலிருந்த 6பேரில் இரு வீட்டாரால் இனம் காணப்பட்டனர். இவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதிலும் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது இணக்கமாகச் செல்லுங்கள் எனவும் இணக்க சபையில் சென்று முறையிடுங்கள் எனவும்  கூறுகின்றனர். பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமை எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பொலிஸாரை அறிவுறுத்துமாறு கோர வேண்டும் என வீட்டார் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

human-rights-commisson-of-srilanka

Related posts: