தலைக்கவசம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முறைப்பாடு!

Saturday, March 18th, 2017

தலைக்கவசம் தொடர்பாக கடந்த மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சங்கம் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் ஆகியன இணைந்து இந்த முறைப்பாட்டை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக போக்குவத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மோட்டார் வாகனத் திணைக்கள உதவி ஆணையாளர் ஜே.ஏ.எஜ ஜயவீர, வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்ற வைத்தியர் சிசிர கோதாகொட, பொலிஸ் மா அதிபர் பாலித பொணான்டோ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

Related posts: