தலவாக்கலையில் லொறி விபத்து – வீடு சேதம்
Wednesday, March 16th, 2016லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 15.03.2016 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான லொறி வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதன் பின் அதன் சாரதி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வருவதற்கு முன்னர் வாகனத்தின் நடத்துனர் ஒருவரால் வாகனத்தை செலுத்த முற்படுகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தினால் குறித்த வீடு முற்றாக சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
துண்டாடப்பட்ட கரத்தை இணைத்த வைத்தியர்கள்!
பாடசாலைகளுக்கு அண்மையில் சிகரட், மதுபானம் விற்கத் தடை!
2000 உத்தியோகபூர்வ கார்கள் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசா...
|
|