தலவாக்கலையில் குழு மோதல்

Tuesday, March 29th, 2016

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் வருடாந்த திருவிழாவின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலில் குறித்த நபர் ஒருவர் மற்றொருவரை தொடையில் கடித்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கால் மற்றும் முதுகுப்பகுதியில் கடியுண்ட நிலையில் பலத்த காயங்களுடன் குறித்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கட்டுகலை தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் விழாவின் போது இரண்டு குழுக்கள் மது அருந்திவிட்ட வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது வாய்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

இம் மோதலின் போது இளைஞன் ஒருவர் பலத்த கடி காயங்களுக்கு ஆளாகியுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

Related posts:


அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையிலிருந்து விலகவுள்ளோம்  - முகவர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
இஸ்லாமியர்களை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச - நீதி அமைச்சர் அ...
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 ...