தற்போதைய குடும்பப் பொருளாதாரம் நடைமுறைக்குப் பொருத்தமானதா?

குடும்பப் பொருளாதாரம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து தீர்வு வழுங்கவதற்காக தலமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க புதிய பிரிவொன்றை நிறுவியுள்ளார்
இந்தப்பிரிவின் முதலாவது கலந்துரையாடல் ரணில்விக்கிரமசிங்க தலமையில் நடைபெற்றது இதன் ஊடாக வீட்டுக் குடும்பத்தின் வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு வீட்டுப் பொருளாதாரம் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்? போன்ற விடயங்கள் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது அது தொடர்பில் தலமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தாவது:-
தேசிய பொருளாதாரம் தொடர்பான தகவலகள் எம்மிடமுள்ளன அதனை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் இந்த நிலையில் வீட்டுப் பொருளாதாரம் தொடர்பான தகவல்களையும் நாம் பெறவேண்டியுள்ளது அத்திய அவசியப் பொருட்களை வைத்தே வாழ்க்கைச் செலவை ஆராய்கின்றோம் தற்போது வீட்டில் அத்தியவசியப் பொருட்கள் மாத்திரமன்றி ஏனைய பல செலவுகளுக்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .போக்குவரத்து,ஆடை,தனியார் வகுப்புக் கட்டணம்,தொலைபேசிக் கட்டணம் உட்பட பல செலவுகள் உள்ளன ஒரு சில குடும்பங்களுக்கு உணவுச் செலவுகளைவிட மேற்குறித்த செலவுகள் அதிகம் குடும்பத்தின் வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு? இது நாட்டின் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கும்? போன்ற விடயங்கங்களைப் புதிய பிரிவு ஆராயும்
நாட்டு மக்களுக்கு எற்றதான பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம் இது தொடர்பில் மீண்டும் கலந்தாய்வு செய்வோம் இதன்படி பணமிருக்கத்தக்க வகையில் அரசு செயலாற்றும் இந்தப் பிரிவு மிக முக்கியமானது என்றார்
அந்தக் கலந்துலையாடலில் நிதி இராஐhங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்~டிசில்வா, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,தேசியக் கொள்கைகள் மற்றுமட பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்ருவன் சந்து நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எச் சமரதுங்க உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|