தற்போதைக்கு இல்லை எட்கா உடன்படிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருந்த எட்கா உடன்படிக்கை தற்போதைக்கு கைச்சாத்திடப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2016 டிசம்பர் மாதம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த உடன்படிக்கை தொடர்பில் இந்தியாவுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருப்பதனால் இவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடும் நடவடிக்கை காலம் தாழ்த்தப்பட உள்ளது.
இது தொடர்பில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஞாயிறு பத்திரிகையொன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.உடன்படிக்கையின் சில நிபந்தனைகள் குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் பெரும்பாலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எட்கா உடன்படிக்கைக்கு சமாந்திரமாக சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் விசேட வர்த்தக உடன்படிக்கைகள் இந்த ஆண்டில் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரவித்துள்ளார்.
Related posts:
|
|