தற்போது அரசியல் குறித்து எதுவும் கூறமுடியாது – டில்ஷான்!.

Saturday, September 10th, 2016

நேற்றையதினத்துடன் சர்வதேச கிரிக்கெற்றிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்றுள்ள திலகரத்ன டில்ஷான் அரசியலில் பிரவேசிக்கவே ஓய்வு பெற்றார் என பரவலாக கதைகள் பேசப்படுகின்றது.

அது குறித்து டில்ஷான் நேற்றையதினம்(10) ஆர்.பிரேமதாச மைதானத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையில்;

தனக்கு தற்போது அரசியல் குறித்து எதுவும் கூறமுடியாது. எதிர்வரும் காலங்களில் அது குறித்து கவனம் செலுத்துவேனா இல்லையா என்பது பற்றியும் தனக்கு தற்போதைக்கு தெரியாது. தற்போதைக்கு அரசியலில் குதிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை.

எவ்வாறாயினும், தனக்கு அரசியல் பற்றிய அறிவும் இல்லை, ஏராளமானோர் அதுபற்றிய அறிவின்மையினால் அரசியலில் குதித்து நிலை தடுமாறியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தலைமையானாலும் பரவாயில்லை, என்ன அழைத்தால் அரசியலில் குதிக்காது,  அவர்களுக்கு பின்னின்று என்னால் இயன்ற காரியங்களை செய்து கொடுப்பேன் எனவும் டில்ஷான் தெரிவித்துள்ளார்.

dilshan-1

Related posts: