தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளே இனி அகற்றப்படும்!

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகள் அகற்றலின்போது தரம் பிரித்து வைக்கப்படும் கழிவுகள் மாத்திரமே இனிமேல் மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்களால் எடுத்துக்கொள்ளப்படும். அவ்வாறு செய்யாதவிடத்து அவற்றை மாநகரசபை அகற்றாது. இந்த நடவடிக்கை மிக இறுக்கமாக முன்னெடுக்கப்படும். என யாழ்.மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதிலும் குப்பைகள் தரம் பிரித்தே அகற்றப்பட்டு வருகின்றன. யாழ்.மாநகரசபை தவிர்ந்த ஏனைய மாநகர சபைகளில் இந்த நடவடிக்கை மிக இறுக்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உக்கக் கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என்று தரம் பிரித்தே மக்கள் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை நாம் இறுக்கமாக முன்னெடுப்போம். சுகாதாரப் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இந்த நடவடிக்கையில் சில தடங்கள்கள் ஏற்பட்டது. எதிர்வரும் காலத்தில் எந்தவித தடங்கல்களும் இல்லாமல் இந்த நடவடிக்கை இறுக்கமாக முன்னெடுக்கப்படும் – என்றார்.
Related posts:
|
|