தரமற்ற 23,000 மெட்ரிக் தொன் எரிபொருள் திருப்பி அனுப்பப்பட்டது!

Sunday, July 17th, 2016

இறக்குமதி செய்யப்பட்ட விமானங்களுக்கான 23 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் உரிய தரத்தைக் கொண்டிருக்காததால் அதனைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்த போது எரிபொருள் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு இருந்த டீசல் உரிய தரத்துடன் காணப்பட்டமையால் டீசலை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் Jet A1 விமானத்திற்கான எரிபொருள் முதல் பரிசோதனையின் போது உரிய தரத்தினைக் கொண்டிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இன்றைய தினம் அந்த எரிபொருள் இரண்டாவது தடவையாக பரிசோதனைக்கு​ உட்படுத்தப்பட்டது.

தரக்குறைவான எரிபொருளை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.