தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்தும் மூல காரண ஹர்த்தா சம்பந்தன்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச் சாட்டு!

Saturday, February 18th, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதில் எம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிழையான வழியில் கொண்டு செல்பவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? எனச் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்துவதற்கான மூல காரண ஹர்த்தாவாக சம்பந்தன் இருக்கிறார் என்கிற நிலைமையை அவரே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் எனக் குற்றம் சாட்டினார் ஈ.பி.ஆர்.எல். எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

unnamed

Related posts: